தினகரன் ஆதரவு நாளேட்டுக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை: தமிழிசை!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

tamilisai soundarrajan 1 - 2026

டிடிவி தினகரன் ஆதரவு நாளேடு பாஜகவை பற்றி விமர்சிப்பதற்கு எல்லாம் பதில் சொல்ல நான் விரும்பவில்லை என்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் … கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அரசியல் செய்யும் பொழுது, ரங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து ஆண்டவன் தண்ணீர் கொடுத்தால் தமிழகத்திற்கு கொடுக்கிறேன் என்றார்.

ஆனால், தற்போது தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது ஆரோக்கியமான சூழ்நிலை. இதில் எந்தவித அரசியலும் கூடாது . ஒருவேளை குமாரசாமி தனது பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை.

தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் வழி செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

ஆனால் ஸ்டாலின் போன்றவர்கள் இந்த பிரச்னையில் வாய் திறக்கவில்லை.

என்னைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் கட்டளைப்படி தண்ணீர் திறந்து விட்டு தான் ஆக வேண்டும்

தினகரன் ஆதரவு நாளேட்டில் எங்கள் கட்சியைப் பற்றி சொல்வதற்கு எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. முதலில் தினகரன் கட்சி முழுமையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய்க் கொண்டிருக்கிறது… என்றார் தமிழிசை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.