கரூரில் பா.ம.க வின் சிறப்பு ஆலோசனை கூட்டம் மாநில துணை பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பா.ம.க முதல்வர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணிராமதாஸ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் தர்மபுரியில் மதுவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளான மகளிர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு பெண்களிடமும் பெரும் வரவேர்ப்பைபெற்றது. இந்நிலையில் கரூர் மாவட்டத்திற்க்கு வருகைபுரியும் மருத்துவர் அன்புமனிராமதாசிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும் ஆர்பாட்டத்திற்கு பெரும் திரளான மகளிர் அணியையும் பெண்களையும் திரட்டுவதோடு பொதுமக்களிடையே பா.ம.க வின் ஆடிப்படை கொள்கைகளை எடுத்து கூறியும் திண்ணை பிரச்சாரத்தின் மூலமும் சுமார் 50 அயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலாகம் முன்பு அல்லது கரூர் வட்டாட்சியர் அலுவாலாகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால் கரூர் மாவட்டத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் விஜயகுமார் தலைமையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பலார்களாக பா.ம.க மாநில துணைதலைவர் கடலூர் சண்முகம் , மாநில துனை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரான் ,வன்னியர் சங்க மாநில துனை தலைவர் மாருத்துவார் மணி , நகர செயலாளர்கள் முருகேசன், குமார் , ஒன்றிய செயலாளர்கள் ராஜா , முத்துசாமி மகளிர் அணியில் பாக்கியம் உள்ளிட்ட கட்சி ஒன்றிய, நகர , பேரூர் செயலாளர்கள் முக்கிய பொருப்பாளர்கள் என ஏராளமானோர் இந்த சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனார். மேலும் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க மாநில துணை பொது செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன், கரூர் மாவட்டத்தில் சுமார் 122 மதுபானக்கடைகள் உள்ளன. பொதுமக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இந்த மதுபானக் கடைகளை, தமிழகத்தின் மது விளக்கு போராளி ஐயா இராமதாசு உத்திரவை பெற்று இந்த மதுபானக்கடைகளை ஒவ்வொன்றாக மூட வேண்டும் என இக்கூட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் பா.ம.க முதல்வர் வேட்பாளரை தமிழக அளவில் அதிகப்படியான வாக்குகள் பெற்று கரூர் மாவட்டத்தை ஒரு முன்னோடி மாவட்டமாக்குவோம் எனவும் ஒவ்வொரு அடிப்படை தொண்டனும் சபதமெடுத்துக்கொண்டோம் என சூளுரையாற்றினார்
கரூர் பா.ம.க வேட்பாளரை அதிக வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய பா.ம.க கூட்டத்தில் சூளுரை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari