அறிவிப்பு வந்து 2 வருடமாச்சு… அந்தியோதயா உதயமாகாமலேயே அந்திமமாச்சு! ஓடாத ரயில் ரத்தான அதிசயம்!

Published:

antyodaya train sengottai - 2026சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணிகள் மேலும் சில ரயில்கள் தேவை என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே நிர்வாகமோ, அறிவிக்கப் பட்ட ஒரு ரயிலை ஒரு சேவை கூட இயக்காமல் அமைதியாக ரத்து செய்துள்ளது. இப்படி அந்திம திசைக்குச் சென்றுள்ளது வேறு ஒன்றும் இல்லை… பயணிகள் ஆவலுடன் அதிகம் எதிர்பார்ப்புடன் கோரி வரும் அந்த்யோதயா ரயில்தான்!

தம்பரம்-செங்கோட்டை அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (16189/16190), இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவால் மிகுந்த ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்டது! இந்த ரயிலின் முக்கிய அம்சமே, இது அறிவிக்கப்பட்ட பயணத் தடம்தான்! மெயின்லைனில் தென்மாவட்டங்களை இணைக்கும் வகையில், மத்திய மாவட்டங்கள் வழியாகச் செல்லும் வகையில் அறிவிக்கப் பட்டது. மேலும், ஒரு முழுமையான முன்பதிவு செய்யப்படாத ரயிலாக இது அறிவிக்கப்பட்டது பயணிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

ஆனால், இந்த ரயிலானது மே 10 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில் ரயில்வே நிர்வாகத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் அண்மையில் வெளியாகி, சமூக ஊடகங்களிலும் வைரலானது. இது தென்மாவட்ட பயணிகளுக்கு அதிர்ச்சியாகவே உள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இந்த ரயிலைப் போல், சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட சென்னை-பெங்களூர் எக்ஸ்பிரஸ் (22689/22690) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களும் பொது நேர அட்டவணையிலும், இந்திய ரயில்வே வெளியிட்ட அட்டவணையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்யோதயா எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு நாளும் தம்பரத்திலிருந்து காலை 7 மணிக்குத் தொடங்கி சிதம்பரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகியவற்றை இணைக்கும் மெயின்லைன் பயணம். இது செங்கோட்டையை அடைய 15.30 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

antyodaya train sengottai1 - 2026ஆனால், தம்பரம்-செங்கோட்டை பிரிவில் ரயிலுக்கான தேவைகள் மற்றும் ஆதரவுகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், ஏற்கெனவே செங்கோட்டை – சென்னைக்கு தினசரி இரண்டு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும், மற்றொரு ரயில் அண்மையில் வாரம் இருமுறை என்பதில் இருந்து மூன்று முறை என மாற்றப் பட்டது என்கின்றனர்.

ஆனால், இவை இரண்டும் இரவு நேர ரயில்கள், அதுவும் கார்ட் லைன் எனப்படும் மதுரை-திண்டுக்கல் – திருச்சி – அரியலூர் வழியில் இயக்கப் படுபவை என்பதும் கவனிக்கப்பட வேண்டியவை. பகல் நேர அந்த்யோதயா ரயிலின் தேவை குறித்தும் பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

“அமைச்சர் இந்த ரயில் குறித்து அறிவிப்பு வெளியிட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த ரயிலுக்காக மக்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த ரயில் 30 நகரங்களில் உள்ள பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்திருக்கும், தற்போது திருநெல்வேலிக்கு இயக்கப் படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் போல் செங்கோட்டை – தாம்பரம் ரயிலும் பிரபலம் அடைந்திருக்கும்…என்கின்றனர்.

Related articles

Recent articles

spot_img