நம் தென்தமிழகத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு போன்று ஸ்பெயின் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான காளை விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அந்நாட்டின் பாம்ப்லோனா நகரில் 6வது நாளாக நடந்து வரும் இந்த போட்டியில் ஏராளமானோர் வெள்ளை நிற உடை அணிந்தும், கழுத்தில் சிவப்பு நிற கைக்குட்டையை கட்டிக்கொண்டும் இந்த போட்டியில் பங்கேற்றனர்.
இதில் ஓடும் காளைகளின் கால்களில் சிக்கியும், அதன் கொம்பு தாக்கியும் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்பெயின் மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த கலாச்சார திருவிழா நாளை நிறைவடைகிறது.


