அசத்திய ஆலங்குளம் டி.எஸ்.பி

DSP PCM 16.4.15பாவூர்சத்திரம்; பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கு மற்றும் பாவூர்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ராசையா மற்றும் போலீசார் திடீர் வாகனசோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த மினிபஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை அழைத்து அவர்கள் சீருடை, லைசென்ஸ், பேட்ஜ், உள்ளதா எனவும் அவர்களின் தோற்றம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து சோதனை நடத்தினர். அப்போது ஒரேஒரு ஓட்டுனர் மட்டுமே ,நேம் பேட்ஜ் மற்றும் அனைத்து உரிய ஆவணங்களுடன் இருந்தார், அவரை பாராட்டிய போலீஸ் துணைசூப்பிரண்டு சங்கு ரொக்கபரிசு வழங்கினார். அதேபோல் மற்ற ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பஸ் நிலையத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அங்கு கடைகள் வைத்திருப்பவர்கள் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் நடந்து கொள்ள அறிவுறுத்தினார். அதே போல் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாராவது நடமாடினால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்கவும் அங்குள்ள கடைஉரிமையாளர்கள் ,ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களிடம் எடுத்து கூறினர். டி.எஸ்.பி.யின் செயலை பொதுமக்கள் மனதார பாரட்டினர்.