அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டிருக்கிறீர்களா? இன்றும் நாளையும்… ஏகாதசி… எச்சரிக்கை!

ஆன்மிகச் செய்திகள் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

athivarathar crowd - 2026

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கும் ஆவலில் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர். அருகில் உள்ள ஊர்களில் என்று மட்டும் இல்லாமல், அண்டை மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆவலுடன் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர் பக்தர்கள்.

குறிப்பாக, வார நாட்களை விட, வார இறுதி நாட்களில் கூட்டம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் சராசரியாக இரண்டரை லட்சம் பேர் அத்திவரதரை தரிசிக்க வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதிலும், தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது

இந்நிலையில், உள்ளூர்வாசிகள் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். ஜூலை 27, 28- சனி, ஞாயிறு இன்று மாலை முதல் நாளை மாலை வரை ஏகாதசி திதி இருப்பதால் அன்றைய தினத்தில் ஸ்ரீ அத்திவரதர் தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தயவுசெய்து கிளம்பி வராதீர்கள்.

அன்றைய தினங்களில் அதிகமான எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே கூட்டத்தை தவிர்க்க இன்று மாலை முதல் நாளை மாலை வரை கோவிலுக்கு வருகை தவிர்த்தல் நல்லது… என்று எச்சரிக்கின்றார்கள்.

#அத்திவரதர்வைபவம் 27/7/2019 – திருவாடிப்பூரம் உத்ஸ்வம் 2ம் நாள் மாலை

திருவாடிப்பூரம் உத்ஸவ புறப்பாட்டில், ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்குள்ளே எழுந்தருளும் பொழுது, மிகச் சரியாக “உலகேத்தும் ஆழியான் அத்தியூரான்…… அத்தியூரான் புள்ளை ஊர்வான்” பாசுர அனுஸந்தானமாயிற்று. இப்பாசுர அனுஸந்தானத்தை, அத்தி வரதனும் தன் வசந்த மண்டபத்திலிருந்து திருச்செவி சாற்றியருளியது ஓர் அற்புத தருணம், அனுபவம்.

– வி.என்.கேசவபாஷ்யம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.