தென்மேற்கு மாவட்டங்களில் காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு !

katralai 1 e1564567834350 - 2026தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி,தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்றாலைகள் அதிகம் உள்ளன. இந்த காற்றாலைகள் 3,200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

இந்நிலையில் தென்திசை காற்றால் தமிழகத்தில் காற்றாலை மூலம் செய்யப்படும் மின்னுற்பத்தி 3000 மெகாவாட் அளவை எட்டியுள்ளது

தற்போது கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக தென் மாவட்டங்களில் அதிகளவில் காற்று வீசுகிறது. இதனால் நெல்லை மாவட்டங்களில் காவல்கிணறு, முப்பந்தல், அஞ்சுகிராமம், இருக்கன்துறை உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக தகவல் தெரிகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மேற்கு, தென்மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். காலை 11 மணி முதல் மாலை 4 மணிக்குள் அதிகபட்ச மின் உற்பத்தி கிடைத்து விடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் நீர்மின் நிலையங்கள் மூலம் நமக்கு மின்சாரம் கிடைக்காத இந்த சூழலில், காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகம் கிடைப்பது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தின் தினசரி சராசரி மின்தேவை 14,000 மெகாவாட்டிற்கும் மேல் உள்ளது. இதில் குறிப்பிட்ட சதவீத மின்தேவை காற்றாலை மின் உற்பத்தி மூலமே பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

காற்றாலை நிறுவங்கள் விற்பனை செய்யும் மின்சாரத்தை, மின்வாரியம் பணம் கொடுத்து வாங்கி நுகர்வோருக்கு அளிக்கிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன் நாள்தோறும் 800 மெகாவாட் அளவிற்கு மட்டுமே காற்றாலை மின்உற்பத்தியானது.

பின்னர் அதிகரித்த காற்று வீச்சு காரணமாக காற்றாலை மின்னுற்பத்தி படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒரு கட்டத்தில் வீசும் காற்றின் வேகம் அதிகரித்து வந்ததால், மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது 3,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories