pavoorchatram பாவூர்சத்திரம் கீழப்பாவூர் யூனியன் ரூ.2கோடியே 30லட்சத்திற்கு திட்டப்பணிகள் தேர்வு கீழப்பாவூர் யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம், தலைவர் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் செல்லப்பாண்டியன், துணைத்தலைவர் உத்திரகுணப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குருசாமிபுரத்தில் சிமெண்ட் ரோடு , தெற்கு கழுநீர்குளத்தில் பள்ளிக்கூடம் அருகில் சிமெண்ட் சாலை , இராஜபாண்டி முதல் தாயார்தோப்பு வரை தார் சாலை அமைத்தல் உட்ப்பட 90 திட்டப்பணிகளுக்கு ரூ.2கோடியே 30லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பாவூர்சத்திரம் அரசு தினசரி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள 10கடைகளை விரைவில் திறக்கவும், திறப்பு விழாக்களில் அரசு விதிமுறைப்படி கல்வெட்டுகள் வைக்கவும் முடிவு செய்யப்பட்டது. கவுன்சிலர்கள் மேலும் பல திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்தனர்.
யூனியன் கூட்டம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari