நிரம்பி வழிகிறது குண்டாறு அணை! விவசாயிகள் மகிழ்ச்சி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

IMG 20190808 WA0002 - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது குண்டாறு நீர்த்தேக்கம்.

சுமார் 36 அடி உயரம் கொண்ட இந்த அணையில் இருந்து பாசனத்திற்கு பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது

வழக்கமாக ஜூன் மாதம் சீசன் தொடங்கும் காலத்திலேயே அருவிகளில்  நீர்ப்பெருக்கு ஏற்பட்டு குண்டாறு அணை பெரும்பாலும் நிரம்பி விடும் … ஆனால் இந்த வருடம் மழைப்பொழிவு இல்லாதநி ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தான் ஓரளவு மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்துவருகிறது இதன் காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து அணைக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிகரித்து காணப்பட்டது

இதை அடுத்து இன்று காலை சுமார் 10 மணி அளவில் அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி தண்ணீர் வழிந்து ஓடுகிறது

இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.