வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

Published:

IMG 20190809 WA0008 - 2026

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன தபால் வாக்குகள் எண்ணப்பட்ட தில் அதிமுக முன்னிலை பெற்றது தொடர்ந்து ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே போட்டா போட்டி நிலவியது

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகமும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தனர் ஒரு கட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளரை விட திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை பெற்று வந்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார் அவர் அதிமுக வேட்பாளரை விட 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ALSO READ:  போதைப் பழக்கத்துக்கு எதிரான இயக்கத்துக்கு வலு சேர்ப்போம்! மனதின் குரலில் பிரதமர்!

Related articles

Recent articles

spot_img