மோடியும் அமித் ஷாவும் கிருஷ்ணார்ஜுனர்கள்: ரஜினி பேச்சு!

Published:

rajini politics - 2026

காஷ்மீர் விவகாரம் தொடர்பில் அமித்ஷாவுக்கு  ரஜினி வாழ்த்து தெரிவித்துள்ளார்

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குரியது, நாடாளுமன்றத்தில் நீங்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது இன்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷாவை பாராட்டி ரஜினிகாந்த் பேசினார்.

மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கய்ய நாயுடு, 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர்! வெங்கைய்யா நாயுடு முற்றிலுமாக ஆன்மிகவாதி அவர் தவறுதலாக அரசியல் தலைவரானது ஆச்சர்யம் என்றார் ரஜினிகாந்த்!

மேலும் மோடியும் அமித்ஷாவும் அர்ஜூனனும் கிருஷ்ணனும் போல என ரஜினி தெரிவித்துள்ளார். .

சென்னை கலைவாணர் அரங்கில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு குறித்த ஆவண புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் ரஜினி பேசினார்.

அப்போது அவர்,  வெங்கைய்ய நாயுடு மிகப் பெரிய ஆன்மிகவாதி. அவர் தவறுதலாக அரசியலுக்கு வந்து விட்டார். மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் வெங்கைய்ய நாயுடு. 45 ஆண்டுகளுக்கு பிறகும் கூட என்னை நினைவு வைத்திருப்பவர்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

காஷ்மீர் நடவடிக்கைக்காக அமித்ஷாவுக்கு எனது பாராட்டுக்கள். காஷ்மீர் நடவடிக்கை குறித்து அவர் நாடாளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றினார். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது.

அமித்ஷாவும், மோடியும் கிருஷ்ணனும் அர்ஜூனனும் போன்றவர்கள். இவர்களில் யார் அர்ஜூனன், யார் கிருஷ்ணன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் இன்று பேசினார் ரஜினிகாந்த்.

Related articles

Recent articles

spot_img