தென்காசி : நெல்லை மாவட்டம் தென்காசி அருகேயுள்ள ஆயிரப்பேரி பாட்டப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் இசக்கிராஜ்(25) இவரது மனைவி இசக்கியம்மாள் (22) மகன்மாரீஸ் (2) இசக்கிராஜ் கேரளாவில் பணி புரிந்து வருகிறார் சம்பவத்தன்று இரவு தன் கணவர் ஊரில் இல்லாத காரணத்தினால் இசக்கியம்மாள் த்ன் குழந்தை மாரீஸ் மற்றும் உறவினரின் மகள் கிருஷ்ணவேணியுடன் அதே தெருவில் இருக்கும் தான் தந்தை வீட்டில் இரவில் தங்கியுள்ளார் அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 3 பேரை பாம்பு கடித்தது இதில் மாரீஸ் என்ற 2வயது சிறுவன் பலியானான். அவனது தாய் இசக்கியம்மாள், உறவினர் கிருஷ்ணவேணி (இரண்டாமாண்டு பயிலும் கல்லூரி மாணவி)ஆகியோர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து குற்றாலம் சரக காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்
பாம்பு கடித்து சிறுவன் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari