IMG 20220228 WA0021 - 2026

இந்து மக்கள் கட்சியினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்!

சென்னை Featured அரசியல்
IMG 20220228 WA0021 - 2026

உண்ணாவிரதத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

  • “பூனூல் அறுப்பேன்” என்ற தடா ரஹீம் பாய் மற்றும் வன்னியரசை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,
  • மதமாற்ற கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சகோதரி லாவண்யா – வின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும்,
  • மோசடி மதமாற்றத்தை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும்,
  • ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் இந்து கோயில்கள் இடிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்,
  • ஈவெரா பெயரில் நடைபெறும் பாலியல் மோசடிகளை அம்பலப்படுத்த வேண்டும்,
  • தமிழக ஆளுநரை விமர்சிப்பதோடு பிரிவினையை தூண்டும் கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
  • நீட் தேர்வை ஆதரிப்பதோடு, தமிழக மாணவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்,
  • சிதம்பரம் நடராஜர் கோயிலின் புனிதத்தை காப்பாற்ற வேண்டும்,
  • PCR சட்டத்தை தவறாக பயன்படுத்துபவர்களை கைது செய்ய வேண்டும்,
  • மகா சிவராத்திரி விழாவிற்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.
    உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில்
    இந்து மக்கள் கட்சியின் சார்பில் நேற்று 27.02.2022 கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.
IMG 20220228 WA0022 - 2026

இந்நிலையில் தடையை மீறி இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

நாகை மாவட்ட பொதுச்செயலாளர் ஆறு. பார்த்திபன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் R.மணிகண்டன், திருவாரூர் மாவட்ட செயலாளர் P.ஜெயராமன் மற்றும் நிர்வாகிகளுடன் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.