சித்ரவதை செய்த கணவனை கொன்ற பெண் கைது..

ராயபுரத்தில் குடித்து விட்டு வந்து சொத்தை கேட்டு நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவனை கழுத்தை பனியனால் இறுக்கி கொன்ற பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னை ராயபுரம் சோமு செட்டி தெருவில் வசித்து வருபவர் சரவணன் ( 40). இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு திவ்வியபாரதி (17), தனலட்சுமி, (16) சூர்யா (14) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். சரவணன் ராயபுரம் எம்.சி. ரோட்டில் சாலையோரம் துணி வியாபாரம் செய்து வந்தார்.

இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதாக தெரிகிறது. நேற்று காலை குடிபோதையில் இருந்த சரவணன் மனைவி முத்துலட்சுமியிடம் தஞ்சாவூரில் உள்ள ‘உனது சொத்தை பிரித்து பணத்தை பெற்றுக்கொண்டு வா’ என்று கூறி மனைவியை அடித்து துன்புறுத்தி ஆடைகளை கழற்றி வீட்டை விட்டு வெளியே போய் விடு என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துலட்சுமி போதையில் இருந்த கணவன் சரவணனை பனியன் துணியால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து முத்துலட்சுமி சரவணன் தம்பி சாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கணவர் மாரடைப்பால் இறந்துபோனதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சாமி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் பெயரில் ராயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து முத்துலட்சுமியிடம் போலீசார் விசாரித்தபோது என் கணவர் தஞ்சாவூரில் உள்ள என் சொத்தை விற்று பணத்தை கொண்டு வா என்று வற்புறுத்தி தினமும் குடித்துவிட்டு வந்து தன்னை கொடுமைப்படுத்தி வந்தார். நேற்று அத்துமீறி எனது ஆடைகளை கழட்டி நிர்வாணமாக்கி வீட்டை விட்டு வெளியே போ என்று கூறியதால் ஆத்திரமடைந்த நான் பனியனால் அவர் கழுத்தை நெரித்தேன். அதில் அவர் இறந்து போனார் என்று போலீசிடம் கூறினார். இந்த சம்பவம் குறித்து காசிமேடு ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் தகராறு செய்த கணவன் கழுத்தை நெரித்து கொன்ற பெண்ணை கைது செய்தனர்.

781301 cni22july2015 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories