images 27 - 2026

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு..

சென்னை
images 27 - 2026

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,725-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரம் 5ம் தேதி சற்று ஏற்றுத்துடன் விற்பனையானது.சவரனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37,888-க்கும், கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.4,736-க்கும் விற்பனையானது. ஆனால் அதற்கு நேர்மாறான விலையில், சனிக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கத்தின் விலை திடீர் குறைவை கண்டு விற்பனை செய்யப்பட்டது. அதாவது சவரன் ரூ.224 குறைந்து ரூ.37,920-க்கும், கிராமுக்கு ரூ.28 குறைந்து ரூ.4,740-க்கும் விற்கப்பட்டது. இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மார்க்கெட் விடுமுறை. அதனால் தங்கத்தின் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி தங்கவிலை  மீண்டும் குறைந்து விற்பனையாகி வருகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.120 குறைந்து ரூ.37,800-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.4,725-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசுகள் அதிகரித்து ரூ.60.50-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.60,500-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நேற்றைய தினம் மகிழ்ச்சியுடன் நகை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள் இன்று அதைவிட மகிழ்ச்சியில் நகை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.