
கிறிஸ்தவர் ஒருவர் தாம் பணிபுரியும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கல்யாணம் முடித்துவிட்டு அருகே சாந்தோம் சர்ச்சில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்போவதாக பத்திரிகை அடித்திருந்தார். இதை அடுத்து ஒரு கிறிஸ்தவர் இந்துக் கோயில் பணி செய்வதையும், திருமணம் செய்வதையும் கண்டித்து சென்னை இந்து முன்னணி போராட்டம் நடத்த முடிவு செய்தது. இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பின் ஏ.டி. இளங்கோவன் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது….
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் பணிபுரியும்! கிறிஸ்தவ நபருக்கு அதே கோயிலில் இன்று திருமணம் நடக்க இருப்பதாகவும், மாலை சாந்தோம் சர்ச்சில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவதாகவும் திருமண பத்திரிகையில் அச்சிடப்பட்டு உள்ளது என பக்தர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில்,
இந்து முன்னணி சார்பில், திருமணம் கோயிலில் நடத்திட அனுமதிக்க கூடாது என்றும்,கிருஸ்தவரை கோயிலில் வேலைக்கு வைக்ககூடாது என்றும் மனு அளிக்கப்பட்டது. நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக ஜனநாயக முறையில் போராட்டங்கள் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
நமது கோரிக்கையடுத்து, இன்று கோயிலில் நடக்க இருந்த திருமணம் வேறு ஒரு இடத்தில் நடத்தப்பட்டு உள்ளது. நமது பணி நீக்க கோரிக்கை அப்படியே இருக்கிறது. கடந்த ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட இவர் திமுக மாணவர் அணி துணை செயலாளர் என திமுக ஒட்டிய போஸ்டர்கள் மூலம் தெரிய வருகிறது.
இந்துக்களின் நம்பிக்கைகளை அழிக்க கிருஸ்தவரை கோயிலில் வேலைக்கு அமர்த்திய இந்து விரோத திமுக மற்றும் இந்து சமய அறநிலையத்துறையே ஆலயத்தை விட்டு வெளியேறு..