
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ள நகைக்கடையில் 9 கிலோ தங்கம் வைர நகைகள் ரஊ20லட்சம் கொள்ளை போனதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் நகைக்கடையில், நேற்று இரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வியாசர்பாடி குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகைக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவின் ஹார்ட் டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். நகைக்கடையின் ஷட்டரை வெல்டின் மெஷினால் வெட்டி கடைக்குள் திருடர்கள் புகுந்துள்ளனர்.
நகைக்கடையிலிருந்து 9 கிலோ தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளையடிக்கப்பட்ட வைர கற்களின் விலை 20 லட்சம் வரை இருக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கொள்ளையர்கள் நகைக்கடையில், எடை அதிகம் உள்ள பெரிய நகைகளை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளதாக கடை உரிமையாளர்
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளார்.
இந்த கொள்ளையில்ஸ சுமார் 9 கிலோ எடையுள்ள தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், மேலும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக கடை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் துரிதமாக செயல்பட்டு, இந்த திருட்டில் ஈடுபட்ட நபர்கள் யார் ? என்றும் சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.




