தமிழகம்- முக்கிய அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை..

images 61 - 2026

 ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் அதிகாரியான மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வீடு உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரொக்கம் கைப்பற்றப்பட்டன.

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட இயக்குநராக பணியாற்றுபவர் ஆர்த்தி (40). இவரது கணவர் ஆனந்தமூர்த்தி (46), தருமபுரி மாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்துள்ளார். இவர், அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ரூ.1 கோடிக்கு சொத்துகள் வாங்கிய புகாரின்பேரில் கடந்த ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

சொத்து வாங்கிய புகாரில் ஆனந்தமூர்த்தி, அவரது மனைவி ஆர்த்தி மற்றும் ஆர்த்தியின் தந்தையும், முன்னாள் வங்கி முதுநிலை மேலாளருமான கலைமணி (70) ஆகியோர் மீது தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தருமபுரியில் உள்ள ஆனந்தமூர்த்தி வீடு, வேலூர் சத்துவாச்சாரியில் ஆர்த்தி வசிக்கும் அரசு குடியிருப்பு, திருச்சியில் ஆர்த்தியின் தந்தை கலைமணி வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று காலை ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், வேலூர் ஆர்த்தி வீட்டில் இருந்து, தருமபுரியில் வாங்கப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான 19 ஏக்கர் விவசாய நிலத்தின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. திருச்சியில் உள்ள கலைமணி வீட்டில் நகைகள், பணம், சொத்து ஆவணங்களை போலீஸார் ஆய்வு செய்தனர்.

திருச்சி – புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதியில் சுமார் 70 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக கிடைத்த தகவல் குறித்தும் விசாரித்தனர். எனினும், சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. தருமபுரி அடுத்த நார்த்தம்பட்டியில் உள்ள ஆர்த்தி வீட்டில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புதுறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 ஈரோடு மாநகராட்சி ஆணையராக பணியாற்றுபவர் சிவகுமார். சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தும் அலுவலராக பணியாற்றினார். இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பல்லாவரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார். அப்போது பல்லாவரம் நகராட்சியில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக இவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, சென்னையில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றிருந்த அவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னையில் இருந்து அவர் நேற்று மாலை ஈரோடு திரும்பினார். அதன்பிறகு, ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். சிவகுமாரிடமும் விசாரணை நடத்தினர். இந்த சோதனை நேற்று இரவு 8 மணி வரை நீடித்தது.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் சிப்காட்டில் நிலம் எடுப்பு தாசில்தாராக பணிபுரிபவர் சந்திரன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள அவரது வீடு, தூத்துக்குடி மடத்தூரில் உள்ள சந்திரனின் மகன் இசக்கிமுத்து வீடு, எட்டயபுரம் சாலையில் உள்ள அவரது நிறுவனம்ஆகிய இடங்களில் போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ரூ.30 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Entertainment News

Popular Categories