
கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் பேராசிரியர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் பேராசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக கல்லூரி வளாகத்தில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே, பாலியல் தொந்தரவு குறித்து மாணவிகள் எவ்வித புகாரும் அளிக்கவில்லை எனக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி கேரளாவை சேர்ந்த முன்னாள் மாணவி, தனது 3 தோழிகளுடன் சேர்ந்து அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரில், கலாஷேத்ராவில் தாங்கள் படிக்கும் காலத்த