December 5, 2025, 5:11 PM
27.9 C
Chennai

சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

chennai air show - 2025
#image_title

உலகமே வியந்து பாராட்டிய சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை. திறனற்ற திமுக அரசின் அலட்சியப் போக்கே இதற்கெல்லாம் காரணமாகும் என்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து வெளியான அறிக்கை:

சென்னை மெரினா கடற்கரை வான்பரப்பில் நம் நாட்டின் விமானப்படை அகிலமே வியக்கும் வகையிலான விமான சாகச நிகழ்ச்சியை கடந்த 06/10/2024 அன்று நடத்தியது.

ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு சண்டிகர் நகரிலும், 2023 ஆம் ஆண்டு பிரக்யராஜ் நகரிலும் இந்த போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியை நம் விமானப்படை நடத்தியுள்ளது.

நம் மாநிலத்தில் தலைநகரில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு ஏறத்தாழ 25 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதைய நிகழ்ச்சிக்கு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் ஆவலும் இருந்தது. அதுவும் நிகழ்ச்சி நடந்த நாள் ஞாயிற்றுகிழமை என்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்வோர் வரை ஆவலுடன் விமான சாகச நிகழ்ச்சியை காண திரண்டனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து கடந்த 26/09/2024 அன்று ஊடகங்களை சந்தித்த விமானபடை துணைத் தளபதி பிரேம் குமார் அவர்கள் ஏறத்தாழ 15 லட்சம் மக்கள் விமானபடை சாகச நிகழ்ச்சியை காண வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஏற்கனவே 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண திரண்ட மக்களின் எண்ணிக்கையை வைத்து 15 லட்சம் பேர் கூடுவார்கள் என்று கணித்தது போலவே மக்கள் திரண்டு வந்தனர். லிம்கா சாதனைப் புத்தகத்தில் கூட இந்நிகழ்ச்சி இடம்பெற்று விட்டது.
ஆனால் திமுக தலைமையிலான மாநில அரசு மக்களுக்கு விளம்பரப் படுத்தியதே தவிர மக்களுக்கான போக்குவரத்து வசதிகள், வாகன நிறுத்துமிடம், குடிநீர், உணவு மற்றும் மருத்துவ வசதிகள் என எந்தவொரு ஏற்பாடும் செய்யவில்லை.

வாகன நிறுத்துமிடத்தில் இடமில்லை. வாகனத்தை நிறுத்திவிட்டு நெடுந்தூரம் மக்கள் நடக்க வேண்டியிருந்தது‌.

அதனால் முதியவர்கள் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
15 லட்சம் மக்கள் வந்து செல்லும் வகையில் மாநகர போக்குவரத்து திட்டமிடப்படவில்லை.

நிகழ்ச்சி முடிந்தும் மக்கள் கலைந்து செல்ல பலமணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். அவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் வந்து செல்ல மாநகர போக்குவரத்து துறை பேருந்து வசதி செய்யவில்லை, மெட்ரோ ரயில் மற்றும் மாநகர ரயில்வே துறைக்கு உரிய தகவலை மாநில அரசு அளிக்கவில்லை.

அந்த நேரத்தில் மாநில அரசின் மாநகர போக்குவரத்து துறையும் தயார் நிலையில் இல்லை. இப்படியாக ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சி ஏற்பாட்டிலும் திமுக அரசு நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளது.

மக்கள் கூட்டத்தை பார்த்த பின்னரே அதிகாரிகள் அவசர ஏற்பாடுகள் செய்து ஓரளவு சமாளித்திருக்கிறார்கள். சாலைகளில் போக்குவரத்து நெரிசலால் அணிவகுத்து நின்ற வாகனங்களால், மக்கள் அனைவருக்கும் எங்கு செல்வது என்றே தெரியாமல் தண்டவாளத்தின் வழியாக நடந்து சென்ற அவலம் எல்லாம் நடந்தேறியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் இதுவரையில் 5 பேர் மரணித்துள்ளனர், பலர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ எந்தவொரு ஏற்பாடுகளும் செய்யப்படாத காரணத்தினால்தான் ஐந்து நபர்களின் உயிர் அநியாயமாக பறி போயுள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் எந்தவொரு முன்னேற்பாடும் செய்யாமல், மக்களால் தூக்கி எறியப்பட்ட மேற்கத்திய நாடுகளின் மன்னராட்சியைப்போல் தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது குடும்பத்தோடு நிகழ்ச்சியை கண்டு களிக்க வந்தாரே தவிர, பொதுமக்கள் பற்றி துளியும் சிந்திக்கவில்லை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.

காவல்துறையும், மாநகராட்சி அதிகாரிகளும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு சேவை செய்வது தங்களுக்கு கிடைத்த பாக்கியம் என்பது போல அவர்களுக்கு மட்டும் தேவையானதை செய்து விட்டு மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் நெறிப்படுத்துவதிலும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பதிலும் தவற விட்டுள்ளனர்

இப்போதும் கூட தமிழக அரசு தனது தவறை உணர்ந்து கொள்ளாமல் தனக்கு விசுவாசமான ஊடகங்களை வைத்து நீர்ச்சத்து குறைபாட்டால் இறந்தனர், வெயில் தாக்கத்தால் இறந்தனர். கூட்ட நெரிசல் இல்லை என்று சப்பைக்கட்டு கட்ட வைக்கின்றனர்.

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் 15 லட்சம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 15 லட்சம் பேருக்கும் காவல்துறை அதிகாரிகளா போட முடியும் என்று கூறுவதெல்லாம் ஆணவத்தின் உச்சம்.

இச்சம்பவத்தின் மூலம் திறனற்ற திமுக அரசு திருந்த போவதுமில்லை தன்னை தவறிலிருந்து திருத்திக் கொள்ள போவதும் இல்லை.
மக்களாகிய நாம் தான் விழிப்போடு செயல்பட வேண்டும். திமுகவின் உண்மை முகத்தை புரிந்து கொள்ள வேண்டும்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories