மார்ச் முதல் ஸ்மார்ட் கார்ட் இருந்தால்தான் ரேசன் பொருள்கள்!

Published:

வரும் மார்ச் மாதம் முதல் ஸ்மார்ட் கார்டு இருந்தால்தான் ரேசன் கடைகளில் பொருள்கள் பெற முடியும். முன்னர் குடும்ப அட்டை தாரர்கள் தங்கள் அட்டைகளைக் கொண்டு தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் துறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருள்களைப் பெற்று வந்தனர். குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்ட் முறை அமல்படுத்தப் பட்டு பெரும்பாலானவர்களுக்கு வழங்கப் பட்டு விட்டது.

இந்நிலையில், மார்ச் மாதம் முதல் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். இருப்பினும், இன்னும் சில இடங்களில் ஸ்மார்ட் கார்ட் வழங்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Related articles

Recent articles

spot_img