மணமான ஒரு வருடத்துக்குள்… கொரோனா பணியில்… விபத்தில் மரித்த சுகாதார ஆய்வாளர்!

கிரைம் நியூஸ் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
health inspector
health inspector

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த சுகாதார ஆய்வாளர் மீது வாகனம் மோதியதில் சம்பவ இடத்தியே பரிதாபமாக உயிரிழந்தார். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசரணை மேற்கொண்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு இவர் சூளகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

வழக்கம் போல கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டு வந்த போது எதிர்பாரத நிலையில் பிக்கப் வாகனம் பிரபு வந்த வண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்,

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி காவல் துறையினர் விபத்தில் பலியான பரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி ஒரு வருடம் ஆன நிலையில், கொரோனா தடுப்பு பணியின் போது விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.