
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட படுக்கப்பத்து ஊராட்சி மன்றத்தில் அட்சய அன்ன சுரபி திட்ட துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி அத்திட்டத்தை துவக்கி வைத்தார்.
ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் இருந்தால் அட்சய அன்ன சுரபி திட்டத்தின்படி வசதியானவர்கள் மற்றும் தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்பட்ட அத்தியாவசிய பொருட்களை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்டத்தில் முதல்முறையாக துவக்கி வைக்கப்பட்டுள்ள அட்சய அன்ன சுரபி திட்டமானது சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர், புத்தன்தருவை, பள்ளக்குறிச்சி, பன்னம்பாறை உள்ளிட்ட 7 ஊராட்சி மன்றங்களிலும் தொடங்கப்பட்டது.
அட்சய அன்ன சுரபி திட்ட துவக்க விழாவில் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியராஜன், செல்வி, படுக்கப்பத்து ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.