வைரமுத்துவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஜனை ஊர்வலம்

ஆண்டாள் நாச்சியார் குறித்த வைரமுத்து விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து பஜனை ஊர்வலம் நடைபெற்றது.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்துவின் விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பஜனை ஊர்வலம் நடைபெற்றது. 

பேருந்து நிலையம் அருகே உள்ள பஜனை கோவிலில் இருந்து ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.