spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைவைரமுத்து கட்டுரைக்கு வழக்குரைஞர் பதிலடி

வைரமுத்து கட்டுரைக்கு வழக்குரைஞர் பதிலடி

- Advertisement -

வைரமுத்து எழுதிய தினமணி கட்டுரைக்கு, எனது பதில்.. 

…. 

திரு.வைத்திய நாதன் அவர்களுக்கு 

தாங்கள் தெரிவித்த படி, எனது எதிர்ப்பை, வைரமுத்துவிற்கு எழுதி  இருக்கிறேன். இதனை ஏதும் மாற்றம் செய்யாது வெளியிட வேண்டுகிறேன்.

             ***

சமீபகாலமாய் தமிழ் கூறும்  நல்லுலகின் “சலசலப்பும் , கிசு கிசுப்பும் – ” வைரமுத்து, ஆன்மீகத்திற்கு  மாறி வருகிறாராமே ?” – என்பதுதான் . ஏனென்றால் இதுநாள் வரை, நாத்திக சிகாமணிகளுக்கு நாவிதம் செய்து வந்த வைரமுத்துவின் நா , இப்போது ஆத்திகத்திற்கு ஆலவட்டம் போடுவது போல் அசைகிறது.  ஆனால் உண்மையாதெனில் நாத்திக வியாபாரம் இனி விலை போகாது என்பதால், அவர் இப்போது ஆன்மீக வாசலில் கையேந்த வந்திருக்கிறார் என்பது தான் .
ஆனால் இதை உணராத சிலர் அவரை உற்சாக​ப்​

படுத்தி உசுப்பேற்று கின்றனர். ​ ​அதில் பாவம்..​தினமணியும் திண்டாடுகிறது … என்றாலும் இந்த நாத்திக ஞமலியை நன்னீராட்டி , நடுப்பக்க (வீட்டில்) வைத்து அழகு பார்த்தால் எப்படி இருக்கும் என்பதன் சான்றுதான் அவரது ” தமிழை ஆண்டாள் ” கட்டுரை .
ஆண்டாளின் அருந்தமிழை அலச வேண்டியவர் அனாவசியமாய்  அறுதியிட்டும்  உறுதியிட்டும் போற்றப்படும் 

​ஆண்டாளின் வரலாற்றை 

அனுமானம் என்பதாய் அசிங்கப்படுத்தி யிருக்கிறார் . இந்த வஞ்சக குசும்பு, கட்டுரையின் பல இடங்களில் துர்நாற்றம் அடிக்கிறது . இந்த கெட்ட வாடையின் உச்சம் தான் ஏதோ ஒரு மிலேச்சன் எழுதியதாய் சொல்லும் அமெரிக்க பல்கலை கழக வாசகம்.
சங்ககால பாவை ​​நோன்புக்கும், பாவையின் பாவை ​​நோ​ன்புக்கும்

 உள்ள அடிப்படை வேறுபாடு புரியாமல் துவங்கும் இக்கட்டுரையில் மூன்றாம் பாசுரத்தின் முதல் வரி விடுத்து,

உயிரியல் வாழ்வியல் என்

​றெல்லா​ம் வர்ணம் பூசி​,​ உத்தமன் பேர் பாடும் இறை​யியல் உண்மையை இலைமறை காயாய்  மறைக்க முயல்வது,

அவரது மடமையை மட்டும் தான் பறை சாற்றுகிறது .
வைணவம் ஏதோ ஏழாம் நூற்றாண்டின் பின்னால் எழுச்சி

​யுற்றது ​என்று எழுதியிருப்பதில் கவிஞரின் அறியாமை பட்டவர்தனமாய் பல் இளிக்கிறது.​  ​இறைநெறியும் அறநெறியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை சொல்ல​த் ​

துணிவும் இல்லை , ஆன்மீகப் ​பணிவும் இல்லை

​ இவருக்கு.  இறைவனின் வாத்சல்யத்திற்கும் சௌலப்யத்திற்கும் காருண்யத்திற்கும் காலஅளவை காட்டும் நீங்கள், ​ முதலில் இதிகாசங்களையும் புராணங்களையும் படியுங்கள் புலவரே !​

 தெய்வம் வேறாம் கடவுள் வேறாம்

​..​என்றெனில் “தெய்வம் தொழா அள் ” என்னும் குறளுக்கு எப்படி குரல் கொடுப்பீர்கள் ?
“கன்னி கழியாத பெண்ணின் பாலியல் உரையாடல்​”​ என்று கோதை தமிழை கொச்சை படுத்தும் உங்களின் சொற்களில் வன்மம் மட்டுமே விரவி இருக்கிறது… என்றாலும்,

நடிகையின் உடலை பார்த்து ரசித்து கவிதை வியாபாரம் செய்யும்  உங்களி​டத்தில்​,​ இலக்கிய சுவையையும்  ஆன்மீக உணர்வையும் எதிர்பார்த்தது

​எங்களது ​தவ​​றுதான் . புரட்சிப்​ பெண் என்றும் புதுமை​ப்​பெண் என்றும் ஆண்டாளை சொல்ல எத்தனிக்கும் உங்கள் எச்சி​ல் ​

சொற்களில் நயவஞ்சகம் மட்டுமே நர்த்தனம் ஆடுகிறது . பெற்ற தாயின் மார்பகத்தை காமுறக்காணும் கயவனின் கண்களில்  ஆண்டாளின் ஆன்மீகம் எப்படி தெரியும்

​ கவிஞரே …​​ ?​
ஆண்டாளின் காதல் சங்க கால மங்கையரின் அகநானூற்று காதல் அல்ல. பசலையில் தவிக்கும் பத்தினியின் பைந்தமிழ் அல்ல

​புலவரே….. ​ஆனால் 

நீங்கள் வினாக்கள் எனும் போர்வையில் வினவ துடிப்பதில்,

விரசம் மட்டுமே விரவி கிடக்கிறது . “குருதி , இறைச்சி ” என்ற சொற்களின் பயன்பாடு, இடம் பொருள் ஏவல் அறியாத

  கல்லாதான் ஒட்பத்தின் பூரண வெளிப்பாடு .
கோதை தமிழை கோலம்  போடும் கோணத்தில் , ” சில வினாக்கள் ” என்னும் போர்வையில் உங்கள் விஷமத்தனத்தால் நாத்தீக விஷத்தை விதையாய் விரவி இருக்கிறீர்கள் . உங்களது வஞ்சக நெஞ்சின் வஞ்ச புகழ்ச்சியில் பாவை தமிழை பாராட்டி இருக்கிறீர்கள் .
வேற்று மதத்து நாட்டவன் கழிப்பிடத்தில் கொட்டி கிடந்த கழிவினை கிளறி அதற்கு கற்பூரம் காட்டி அற்புதம் என்கிறீர்கள் . முடிவில் கடந்த கால நிகழ்காலம், இறந்த கால எதிர்காலம் எனும் வார்த்தை ஜாலத்தால் வாசகர்களை 

​ வஞ்சித்து இருக்கிறீர்கள் ..​

. திட்டமிட்டு கோதை தமிழை வட்டமிட்டு​,​

மட்டம் தட்டிவிட்டு,

யாதும் அறியாதது போல், ​”​விட்டு விடுங்கள்​”​ என்று மன்னிப்பு கோருகிறீர்கள் .

கவிஞரே ​….​

ஒன்றை நினைவில் நிறுத்துங்கள்

​….​ இனி எழுதுவதையும் நிறுத்துங்கள்

​….​ ஏனெனில் உங்களை போன்ற பசுத்தோல் புலிகளை, மன்னிக்க

நாங்கள் மஹாத்மாக்களும் அல்ல

​….​மடையர்களும் அல்ல… 

​இனி மன்னிக்கவும் மாட்டோம்

​…​தண்டிக்க தயங்கவும் மாட்டோம் .
இப்ப​டிக்கு ​ 

கவிஞர்  எஸ் .ச​தீ​ஷ் குமார் 

வழக்கறிஞர் 

சென்னை உயர்நீதி மன்றம் 

அலை பேசி எண் : 98410​ ​98606

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe