sulur temple project bjp helped1 - 2026

சூலூரில் கோவிலை புனரமைக்க உதவிக்கரம் நீட்டிய பாஜக.,!

கோவை லைஃப் ஸ்டைல்
sulur temple project bjp helped1 - 2026

சூலூர் சோளக்காட்டுபாளையம் காலனி பகுதியில் பட்டியல்பிரிவு மக்கள் ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோவிலை கட்ட எடுத்த முயற்சி எட்டு ஆண்டுகளாக தடைபட்டு நின்றது.இதையறிந்த பாஜகவினர் குறிப்பாக ஆன்மிகம் மற்றும் ஆலய பாதுகாப்பு பிரிவு,மாநில செயலாளர் அரசூர் அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் அப்பகுதியின் கோரிக்கையை ஏற்று தடைபட்டு போன கோவில் பணிகளை மீண்டும் கட்டிமுடிக்க அப்பகுதி மக்களுக்கு உதவ முன்வந்தார்கள்.

இந்நிலையில் பாஜக  விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ்,ஆன்மிகம் மற்றும் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் திரு.M.நாச்சியப்பன் உள்ளிட்டோர் அப்பகுதிக்குச் சென்று 10,000  செங்கற்கள் மற்றும் நிதியுதவியும் வழங்கி கோவில் கட்டும் பணிக்கு உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய பாஜக விவசாய அணி மாநில தலைவர் திரு.G.K.நாகராஜ் இந்துமதம் என்பது ஆரோக்யமான வாழ்வியல் முறையை அடிப்படையாகக் கொண்டது.அக்கலாச்சாரத்தில் சொல்லப்படும்,செய்யப்படும் ஒவ்வொரு சடங்குக்கு பின்னாலும் ஒரு அறிவியல் உண்மை கலந்திருக்கிறது.

மாட்டை கோமாதா என்றார்கள்.ஒரு வீட்டில் மாடு இருந்தால் மாட்டின் பால், தயிர்,நெய், கோமியம், சாணம்  இவையனைத்தும் ஐந்து அமிர்தம் என்றழைக்கப்படுகிறது.இது கிருமி நாசினி.நாம் வாழும் மண்ணை தூய்மைபடுத்தக்கூடியது.நோயற்ற வாழ்வை மனிதர்களுக்கு உருவாக்கக்கூடியது.எனவே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார்கள்.

sulur temple project bjp helped2 - 2026

மாடு என்றால் செல்வம் என்று பொருள்படும்.நமது பாரம்பரிய கலாச்சாரத்தை அழியாமல் பாதுகாக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் கோபூஜையின் பலன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.ஷியாம் பிரசாத் முகர்ஜி அவர்களது 69-வது ஆண்டு பலிதின நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  மாவட்ட பொதுச்செயலாளர் திரு.சத்யமூர்த்தி,மாவட்ட துணை தலைவர்கள் திரு.நடராஜ்,திரு.பரமசிவம்,விவசாய அணி மாவட்ட தலைவர் திரு.ஆர்த்தி ரவி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஊர்பொதுமக்களும் கலந்துகொண்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.