
டேன்டீ மூடும் விவகாரம்-தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முறன்ற அதிமுக
எம்.எல்.ஏக்கள் உட்பட தொழிலாளா்கள் பலர் கைதுசெய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
டேன்டீ மூடப்படும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க
முயன்ற இரு எம்.எல்.ஏக்கள் மற்றும் ௮திமு௧ கட்சியினா் தொழிலாளா்களை போலீசாா் கைது
செய்தனா்
தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டங்கள் நீலகிரி
மாவட்டம் கோத்தகிரி, கூடலூா் மற்றும் கோவை மாவட்டம் வால்பாறையில்
உள்ளது.இந்த இரு மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டங்களில் சுமாா் 5 ஆயிரம்
தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா் இந்நிலையில் வால்பாறையில் டேன்டீ
நிா்வாகத்திற்கு சொந்தமான அணைத்து தேயிலை தோட்டங்கள் மற்றும் நீலகிரி
மாவட்டத்தில் சில பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் மூடி சுமாா் 5300
ஏக்கா் பரப்பளவிலான தேயிலை தோட்டங்களை வனத்துறை வசம் ஒப்படைக்க அராசாணை
வெளியிடப்பட்டு அதற்கான நடவடிக்கையை டேன்டீ நிா்வாகத்தினா்
மேற்கொண்டுள்ளனா். இதற்கு தோட்ட தொழிலாளா்கள் தொழிற்சங்கத்தினா் மற்றும்
அரசியல் கட்சியினா் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் செய்து
வருகின்ரனா்.
இதனிடையே வால்பாறை எம்.எல்.ஏ அமுல்கந்தசாமி தலைமையில்
அதிமுகவினா் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனா்.ஆனால்
காவல்துறையினா் இதற்கு அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை
வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு உண்ணாவிரதம் இ௫க்க வந்த வால்பாறை
எம்.எல்.ஏ. அமுல்கந்தசாமி, கூடலூா் எம்.எல்.ஏ.பொன் ஜெயசீலன், வால்பாறை அதிமுக
நகர செயலாளா் மயில்கணேசன், மதிமுக தொழிற்சங்க தலைவா் கல்யாணி உட்பட
அதிமுவினா் தோட்ட தொழிலாளா்கள் என நூற்றுக்கனக்கானோா்௧ளை போலீசாா் கைது
செய்தனா்.