காங். தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது: பிரதமர் மோடி

கோவை சற்றுமுன் தமிழகம்

modi coim batore - 2026

நீரை முழுமையாக பயன்படுத்த ஒரு சிறப்பு அமைச்சகம் உருவாக்கப்படும் என்று பிரதமர் மோடி பேசினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார் இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்

இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி…

நதிகளை தூய்மைப்படுத்தவும், இணைக்கவும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறோம்

மழைநீர் சேகரிப்புக்கும் முன்னுரிமை அளித்து வருகிறோம்

காங். தேர்தல் அறிக்கை நாட்டிற்கு எதிராக இருப்பதற்கு அதை தயாரித்த தலைவரே சாட்சி.

காங். தேர்தல் அறிக்கையில் நடுத்தர மக்களை பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடவில்லை.

காங். தேர்தல் அறிக்கை பயங்கரவாதிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது

10 ஆண்டுகளில் காங்கிரஸ் கூட்டணி 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியது, ஆனால் 5 ஆண்டுகளில் பாஜக அரசு 1.5 கோடி வீடுகளை கட்டி கொடுத்துள்ளது

நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாட்டுக்காக பாஜக கூட்டணி உழைத்து வருகிறது

சபரிமலை விவகாரத்தில் காங்கிரசின் இரட்டை வேடத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

கேரள மக்களின் பாரம்பரியத்தை காக்க பாஜக துணை நிற்கும்.

காங்கிரசும், திமுகவும் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்… என்று பேசினார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.