தரம் உயர்த்தப்படும் பள்ளிகள்! உருவாகும் 70 பணியிடம்!

Published:

tn-cm
tn-cm

தமிழகம் முழுவதிலும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 35 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த ஜனவரி 19ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 35 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தரம் உயர்த்தப்படும் 35 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக நிலை உயர்த்தப்படுகின்றனர். மேற்கண்ட 35 பள்ளிகளுக்கு தலா இரண்டு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 70 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படுகிறது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img