சாலையில் கிடந்த ரூ.40 ஆயிரம்: உரியவரிடம் ஒப்படைத்த காவலருக்கு ஆணையர் பாராட்டு!

Published:

madurai police
madurai police

மதுரையில் சாலையில் தவறவிட்ட 40 ஆயிரம் பணத்தை 15 நிமிடத்தில் உரியவரிடம் ஒப்படைத்த ஊர்க்காவல் படை காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 22.05.2020-ம் தேதி மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் அழகு சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வரும் முகேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மதுரை விளக்குத்தூண் சந்திப்பில் எதிர்பாராதவிதமாக தான் வைத்திருந்த 40,000 பணத்தை தவறவிட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை காவலர் விக்னேஷ்வரன் என்பவர் பணத்தை எடுத்து பணம் தொலைந்த 15 நிமிடத்தில் பணத்தின் உரிமையாளரைக் கண்டுபிடித்து காவல் உதவி ஆய்வாளர் கோமதி முன்னிலையில் ஒப்படைத்தார்.

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், விக்னேஷ்வரனை நேரில் அழைத்து அவரின் நற்செயலை பாராட்டி பண வெகுமதி வழங்கினார்..

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  சோசலிசம் என்னும் கை விலங்கு!

Related articles

Recent articles

spot_img