
மதுரை மாவட்டம் நகர, வட்டார இ.காங்கிரஸ் கட்சி சார்பாக சீன எல்லையில் உயிர்த் தியாகம் செய்த இராணுவவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்தூவி மௌனஅஞ்சலி செலுத்தப் பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாரதலைவர் ஐ.கே.குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்டத்துணைத்தலைவர், எஸ்.எஸ்.குருசாமி, மகிளாகாங்கிரஸ் மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன்,
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துசங்கதன் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் வழக்கறிஞர் அசோக், தெற்கு வட்டார தலைவர் பழனிவேல், மாவட்ட பொது செயலாளர்கள் வழக்கறிஞர்
செல்வக்குமார்,ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் ஓ.எம்.முருகானந்தம் வரவேற்றார். இதில் மனித உரிமை தொகுதிதலைவர் ஆர்.மூர்த்தி, சோழவந்தான் நகரதலைவர் மாணிக்கமூர்த்தி, வடக்கு வட்டார ஒருங்கிணைப் பாளர் முருகன், அழகன், ரவி, வருசை முகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தகவல் தொழில் நுட்ப பிரிவு தொகுதி தலைவர்
வையாபுரி நன்றி கூறினார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை



