
லடாக் எல்லைப்பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை அடுத்து ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த 15ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீனா ராணுவத்தினரிடையே நடைபெற்ற கைகலப்பு தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனர்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சீன ராணுவத்தினர் ஊடுருவலைத் தடுத்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதனிடையே, ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோராவில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் உள்ள சேவா உளா என்ற இடத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், அங்கு வந்த பாதுகாப்பு படையினரை தாக்கினர். இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்தது.

இதில் அடையாளம் தெரியாத 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையனர் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளார்களா என பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.