அண்டா குண்டா சட்டிக்கெல்லாம் இனி வேலையில்லை: செல்லூர் ராஜூ!

sellur-k-raju
sellur-k-raju

மதுரை : நல்லவர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் என்று கூறுவார்கள். திருவள்ளுவரின் திருக்குறளும் அவ்வாறு கூறுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஆட்சி நடைபெறுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கொட்டும் மழையில் குடை பிடித்த படி செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

நாளை மதுரையில் 1,295 கோடி ரூபாய் மதிப்பில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானம் நுழைவுவாயில் பகுதியில் பிரம்மாண்ட முல்லைப் பெரியாறு அணை குடிநீர்த் திட்டம் குறித்த மாதிரி வடிவத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்பேசிய போது…

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ரூ.1,295 கோடி மதிப்பில் லோயர் கேம்ப் பகுதியிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட உள்ளது. இதனை முதல்வர் எடப்பாடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். இது வரலாற்றில் மிக முக்கிய ஒன்று. மதுரை மக்கள் மிகவும் நன்றியுடையவர்கள்.

நம் மக்கள் குடிக்க தண்ணீர் கொடுத்தாலே அவர்களுக்காக எதையும் செய்வார்கள். அதுவே இந்த மண்ணின் குணம். இந்த தலைமுறைக்கும் மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் கொடுக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். அதிமுக சார்பில் 20 இடங்களில் முதல்வருக்கு வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

அண்டா குண்டா சட்டி உள்ளிட்ட எதுக்கும் இனிமேல் வேலை இல்லை. மதுரை மக்கள் வீடுகளில் இருந்தபடியே மக்கள் தண்ணீர் பிடித்துக்கொள்ளலாம். நல்லவர் ஆட்சியில் மாதம் மும்மாரி மழை பொழியும் எனக் கூறுவார்கள். திருவள்ளுவர் திருக்குறளும் அவ்வாறு கூறுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக முதல்வர் ஆட்சி நடைபெறுகிறது.

மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுள்ளனர். எங்களுடைய திட்டங்களை செயல்பாடுகளை கண்டு எங்களுக்கு ஆதரவளிப்பார்கள். எங்கள் செயல்பாடுகளைக் கண்டு எதிர்க் கட்சித்தலைவர் கூட குற்றம் குறை சொல்ல முடியவில்லை.

புயல் மழை காலங்களில் பொதுமக்களுக்கு தாமதமின்றி ரேசன் பொருட்கள் கிடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளை மேடான பகுதிக்கு மாற்றி பொருட்களை பாதுகாக்கவும் கூறியுள்ளோம் என தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories