மதுரையில் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
madurai-rajini-fans
madurai-rajini-fans

நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே ரஜினி ரசிகர்கள், மதுரை மாவட்ட இளைஞர் அணி செயலர் காமாட்சி தலைமையில் ஒன்றியச் செயலாளர் விஜயக்குமார், ஒன்றிய இணைச் செயலாளர் கருப்பையா, ரஜினி மன்ற நிர்வாகிகள் விஸ்வநாதன், முரளி, ராஜதுரை, சுரேஷ், பாபு, மகாலிங்கம், வசந்த், தனிச்சியம் மருது, கல்லணை ராஜா, முடுவார்பட்டி கண்ணன் உள்ளிட்டோர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர்.

இதேபோல், குமாரம், பாலமேடு, கேட்டுகடை, முடுவார்பட்டி பகுதிகளிலிலும் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.