ஏப்ரல் 22, 2021, 1:38 காலை வியாழக்கிழமை
More

  மரகத லிங்கம் மாயமான வழக்கை பொதுநல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு!

  புகார் மனு மீது ஏன்? இதுவரை வழக்கு பதிவு செய்ய வில்லையென கேள்வி எழுப்பிய நீதிபதி. பார்த்திபன் இந்த வழக்கை

  madurai-highcourt-branch
  madurai-highcourt-branch

  பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மாயமான வழக்கை பொது நல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு..

  மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர். வக்கீல். முத்துக்குமார். இவர் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் 2014 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் எதிரே பழமையான குன்னத்தூர் சத்திரம் இருந்தது. அதில் மதுரை மாநகராட்சியின் வரி வசூல் அலுவலகம் இயங்கி வந்தது. அதற்குள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் இருந்தது.

  தினமும் அங்கு பூஜை, வழிபாடு மற்றும் அன்னதானம் நடை பெற்று வந்தது. நாளைடைவில் அந்த பழமையான சத்திரம் ஸ்திர தன்மை இல்லாததை காரணம் காட்டி இடிக்கப் பட்டது. அதிலிருந்த மரகத லிங்கம் மற்றும் சந்தன பேழை, செப்பு பட்டயம் அனைத்தும் மதுரை மாநகராட்சி அலுவலக கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்க பட்டது.

  சில நாட்கள் கழித்து அந்த மரகத லிங்கம் மாயமாகி விட்டது. இந்த மரகத லிங்கம் வெளி நாட்டிற்கு கடத்தப் பட்டு விட்டதாகவும் அதை கண்டு பிடித்து மீண்டும் பொது மக்களின் வழிபாட்டிற்கு வைக்க வேண்டுமென மதுரை. அண்ணாநகரை சேர்ந்த வக்கீல். முத்துக்குமார் தல்லாகுளம் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் மனு அளித்தார்.

  போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மதுரை உயர் நீதி மன்ற கிளையில் வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த அப்போதையை நீதிபதி. கிருபாகரன் மதுரை மாநகராட்சி கமிஷனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்திரவிட்டார். விசாரணை குழுவும் அமைக்க பட்டது.

  இதற்கிடையில் இந்த வழக்கு மீண்டும் இன்று நீதிபதி. பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வாதிடும்போது ஸ்ரீரங்கத்தில் ஒரு மரகத லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க முடியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

  இந்த வழக்கு சம்பந்தமாக வக்கீல். முத்துக்குமார் கொடுத்த புகார் மனு மீது ஏன்? இதுவரை வழக்கு பதிவு செய்ய வில்லையென கேள்வி எழுப்பிய நீதிபதி. பார்த்திபன் இந்த வழக்கை பொது நல வழக்காக இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சக்கு மாற்றி உத்தரவிட்டார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »