சுபகிருது தமிழ் ஆண்டு நாள்காட்டி; வெளியிட்டு ஆசி வழங்கிய மதுரை ஆதீனம்!

Published:

tamil year calender1 - 2026

தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கத்தின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள சுபகிருது வருட தமிழ் ஆண்டு நாள்காட்டியை மதுரை ஆதீன மடத்தின் 293 வது ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தம் திருக்கரத்தால் வெளியிட்டு ஆசி வழங்கினார்.

tamil calender release - 2026

தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம், மதுரை மண்டலம் சார்பாக சுபகிருது ஆண்டு தமிழ் நாள்காட்டி திங்கள் கிழமை (ஏப்.11) மதுரை ஆதீனம் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. பாஜக., மாநில பொதுச் செயலர் பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன் அதனைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமர் மற்றும் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த தமிழாண்டு நாள்காட்டியை பாஜக., மூத்த தலைவர் ஹ.ராஜா அறிமுகப்படுத்தினார்.

tamil year calender3 - 2026

சென்னையில் தெலங்கானா மாநில ஆளுநரும் புதுவையின் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனிடம் சுபகிருது தமிழாண்டு நாள்காட்டி வழங்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் A.N ராஜா, டாக்டர் சௌந்தரராஜன் ஆகியோரிடம் தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் இளைஞரணி தலைவர் செந்தில் தமிழாண்டு நாள்காட்டியை வழங்கினார்.

ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Related articles

Recent articles

spot_img