
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி பகுதியில் காய்ச்சலுக்காக ஊசி போட்ட சிறுவன் உயிர் இழப்பு. செவிலியர் கைது மருத்துவர் மீது விசாரணை
விருதுநகர் மாவட்டம்
இராஜபாளையம் மலையடிப்பட்டியில் பகுதியில் வீட்டில் வைத்து செவிலியர் அக்மேஸ் க/பெ கதிர்வேல்முருகன் என்பவர் அருகில் உள்ளவர்கள் காய்ச்சல் தலைவலி என்றால் மருத்துவம் பார்த்து வந்துள்ளார் அவரிடம் இராஜபாளையம் வடக்கு மலையடிபட்டி பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவரது மகன்
கவிதேவநாதன் (5) காய்ச்சலுக்காக கடந்த வியாழ கிழமை ஊசி போட்டு உள்ளர் மூன்று நாட்களாகியும் காய்ச்சல் குறையாத நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியக்கூடிய மருத்துவர் சம்பந்தபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார் அங்கு சென்று ஊசி போட்டுள்ளனர் ஊசி போட்டு வீட்டுக்கு வந்து சில மணி நேரங்களில் சிறுவன் சோர்வாகவும் எந்த ஒரு அசைவும் இல்லாமல் காணப்பட்டுள்ளன் உறவினர்கள் தனியார் மருத்துவமனை கொண்டு சென்று உள்ளனர் அங்கு அனுமதிக்கு மறுத்ததை அடுத்து இராஜபாளையம் மருத்துவமனை கொண்டு சென்ற போது சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினார்.

இதை அடுத்து இன்று விருதுநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உடல் இராஜபாளையம் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது .
இந்த நிலையில் சிவகாசி சுகாதார துணை இயக்குனர்
கலுசிவலிங்கம் மற்றும் இராஜபாளையம் நகர் நல அலுவலர் மருத்துவர் சரோஜா ஆகியோர் சிறுவனுக்கு ஊசி போட்ட அக்மேஸ்
W/o கதிர்வேல்முருகன் என்ற நர்ஸ்யிடம் விசாரணை மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் விசாரணைக்கு அரிக்கையை சமர்ப்பித்தார் .அதன் அடிப்படையில் நர்ஸ் மீது இராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.