
மழையின் காரணமாக
சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமாலிங்கம் கோயில். இந்த கோயிலானது கடல் மட்டத்தில் இருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் கடந்த சிதனங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் இன்று பிரதோஷத்திற்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.