
ஆவினில் 2020-21 ஆம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆவினில் மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்கள் பணியிடங்களுக்கு கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் எழுத்து தேர்வு , நேர்காணல் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதற்கு தகுதியில்லாத நபர்களுக்கு பணி வழங்கியது ,எழுத்துத் தேர்வு வினாத்தாள் வெளியானது , தகுதியானவர்களை நேர்காணல் அழைக்காதது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
ஆவின் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி தலைமையிலான குழு இதுகுறித்துக் புகாரை விசாரித்து வந்த நிலையில், அறிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், 147 பணி நியமனத்திற்கான அறிவிப்புகளை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
Posts by Sakthi Paramasivan.k:
- தீபாவளி சிறப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சேர்த்தி சேவை!
- சித்திரை ஆட்டத் திருநாள் பூஜை; சபரிமலை பக்தர்களுக்கு ஒரு ‘நல்ல’ செய்தி!
- ஆரியன்காவு கோயிலில் முக்கிய திருப்பணி!
- குருவாயூர் ஏகாதசி: லட்ச தீப ஒளியில் ஜொலித்த ஸ்ரீ கிருஷ்ணன் கோயில்!
- ஐப்பசி பூரம்; ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் சிறப்பு ஆராதனை!



