
இராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.ஒருவர் கைது செய்யப் பட்டார் மூன்று பேர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு காவல்துறை வாகன சோதனை ஈடுபட்ட பொழுது ஆட்டோவில் மூட்டையில் உடன் இளைஞர் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனை செய்து பார்த்துக் கொள்வது மூட்டைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதைக் கண்ட போலீஸ் சார் தீவிர விசாரணை செய்த பொழுது சேத்தூர் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து அதில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது .
இதை அடுத்து சேத்தூர் காவல் நிலைய. சார்பு ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை செய்த பொழுது தூத்துக்குடியில் இருந்து மணி என்ற மணிகண்டன் உதவியுடன் லாரி மூலம் குட்கா கொண்டு வந்து சேத்தூர் .முகவூர் .
தளவாய்புரம். இராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனையில் ஈடுபட்ட வந்தது தெரியவந்தது இதை அடுத்து மூகவூர் பகுதியைச் சேர்ந்த ஜெயபாஸ்கர் மகன் அருண்குமார் வயது 25 என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து ஆட்டோவில் 550 கிலோபற்முதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குட்கா பருவங்கள் விவகாரத்தில் 3 வரை போலீசார் தேடி வருகின்றனர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புயலின் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என காவல்துறை தெரிவித்தனர்