
மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் அண்மையில் துவக்கப்பட்ட ஜபிவுளி தங்க ஆபரணங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அடங்கிய பிரபல சூப்பா் சரவணா ஸ்டோர்ஸ் சில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி 3 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
9வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
முன்னணி சில்லரை வா்த்தக நிறுவனங்களில் ஒன்றான சூப்பா் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் புதிய கிளையை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியது.

6 லட்சம் சதுர அடியில் 10 தளங்களுடன் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது இந்தக் கடை. இதில் நாள்தோறும் வணிகம் நடைபெற்று வந்த நிலையில், இன்று (மார்ச் 1) மாலை இந்தக் கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
9வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் சிக்கி 3 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.