அய்யூர் கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூர் கிராமத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலில் பெரிய விநாயகர் சிலை கிராமத்தில் சார்பாக வாங்கப்பட்டு அதற்கு மாலை அணிவித்து பொங்கல் வைத்து சுண்டல், பொரிகடலை, ஆப்பிள், பேரிக்காய், கொய்யாப்பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்குடன் சுவாமி முன் படைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பின்னர் கிராமத்தினருக்கு பூஜை பொருள்கள் வழங்கப்பட்டது.. பின்னர், கிராமத்தின் சார்பாக வாணவேடிக்கையுடன் மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் வந்து அய்யூர் பிரிவு அருகே உள்ள கம்மாய் தண்ணீரில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது. இவ்விழா ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள் செய்திருந்தனர் பாதுகாப்பு ஏற்பாடுகளை, பாலமேடு போலீசார் செய்திருந்தனர்.
சோழவந்தானில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்
சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மூன்று நாட்கள் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. வழி நேடுகே கிராம மக்கள் விநாயகரை வரவேற்று அபிஷேகம் பூஜைகள் செய்தனர்.
இதில் இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் தனசேகரன், நிர்வாகிகள் சுரேஷ்,பாபு,காசி உள்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.