
உசிலம்பட்டியில் அரசு உதவிபெறும் பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழாவில் பலவகையான உணவுகள் வைத்து அசத்திய பள்ளி!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி, பள்ளியில் பயிலும் குழந்தைகள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதற்காக பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே பாரம்பரிய உணவுகளை தயாரித்து பாரம்பரிய உணவுத்திருவிழாவில் இடம்பெறச் செய்தனர்.
இதில் பாரம்பரிய உணவுகளான கம்மகூழ், கேப்பiகூழ், முளை கட்டிய பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, கேப்பை புட்டு, மோர்குழம்பு, கேரட், வெண்டைக்காய், உள்ளிட்ட பலவகையான காய்கறிகள் உள்ளிட்டவைகளை வைத்து பின் பள்ளி குழந்தைகளுக்கு பரிமாறினர்.
இதில், வட்டாரக் கல்வி அலுவலர் தேவி முன்னிலை வகித்தார், பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு வரவேற்று பேசினார். உசிலம்பட்டி எம்.எல்.ஏ .
அய்யப்பன் பங்கேற்று பள்ளி குழந்தைகளுக்கு உணவுகளை வழங்கினார்.
ஆர்வத்துடன் வாங்கி சென்ற பள்ளி குழந்தைகள் பாரம்பரிய உணவுகளை ருசித்து சாப்பிட்டனர். இதில், உசிலம்பட்டி காவல் ஆய்வாளர் சுரேந்திரகுமார் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.





