தேவர் பெயர் வைக்க… சாகும் வரை உண்ணாவிரதம்! அனுமதி கோரி காவல் ஆய்வாளரிடம் மனு!

மதுரை லைஃப் ஸ்டைல்

madurai thevar group submitted police - 2026

மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரைச் சூட்ட வேண்டும், தேவரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேவர் சமுதாய அமைப்புகளின் சார்பில் அண்மையில் போராட்டம் நடத்தப் பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தேவரின தேசபக்த முன்னணி சார்பில் பிப் – 27ஆம் தேதி தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு திருமங்கலம் காவல் ஆய்வாளரிடம் அனுமதி வழங்க வேண்டி மனு வழங்கப்பட்டுள்ளது.

சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளும் ஐந்து பேர் என,  1)K.A.முருகன் ஜி (பாரதீய பார்வர்டு பிளாக்) 2)K.C.திருமாறன் ஜி  (தென்னிந்திய பார்வர்டு பிளாக்) 3)செந்தூர் பாண்டியன் (மூவேந்தர் முன்னணி கழகம்) 4)கர்ணன்
(அகில இந்திய பார்வர்டு பிளாக்)  5)டாக்டர் பொன். அர்ஜூன் (பசும்பொன் தேசிய கழகம்)… ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

  • சூரிய பாண்டியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.