10 வருடமாக மம்தா கடும் டார்ச்சர்; தற்கொலை செய்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி!

சற்றுமுன் புகார் பெட்டி பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

derek mamata - 2026

கடந்த வருடம் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தத், தனது தற்கொலைக்கு மம்தா பானர்ஜியே காரணம் என்று மரண வாக்குமூலம் எழுதி வைத்திருக்கிறார். இது மேற்கு வங்கம் மட்டுமல்லாது நாடு முழுதும் பெரும் பிரச்னையாக எதிரொலித்தது.

மம்தா பானர்ஜி என்னை திட்டமிட்டு பழிவாங்கினார் என்கிறார் ஐபிஎஸ் அதிகாரியான தத் தனது கடிதத்தில்.!

மேற்கு வங்கத்தில் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி, கௌரவ் சந்திரதத்! இவர் தனது கை மணிக்கட்டு நரம்பை கிழித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் தற்கொலைக்கு முதல்வர் மம்தாவின் பழிவாங்கல் நடவடிக்கையே காரணம் என மரண வாக்குமூலம் எழுதி வைத்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜோதிபாசு ஆட்சிக் காலத்தில் அமைச்சர் பதவி வகித்த பெனாய் சௌத்ரியை காந்தியுடன் ஒப்பிட்டவர் தத். ஜோதிபாசுவை நேருவுடன் ஒப்பிட்டவர். தில்லி பல்கலைக் கழகத்தில் கம்பூனிஸ்ட் தலைவர் சீதாராம் எச்சூரியுடன் ஒன்றாகப் படித்தவர்.

இப்படி எல்லாம் இருந்த தத், இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதற்கு முன், இவர்  ஒரு கடிதத்தை எழுதிவிட்டுச் சென்றுள்ளார். இந்தக் கடிதத்தில் தன் தற்கொலைக்கு முதல்வர் மம்தாவே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது மரண வாக்குமூலம் இப்போது கொல்கத்தாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடைய் இந்தத் தற்கொலை வழக்கினை  சிபிஐ-க்கு மாற்றி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக., வலியுறுத்தியுள்ளது.

கௌரவ் சந்திர தத் கடந்த வருடம் விருப்ப ஓய்வு பெற்றார். தனது ஓய்வூதிய கோப்புகள், கிராஜுவிட்டி பணப் பலன்கள் ஆகியவற்றுக்காக அவர் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு வந்து சேரவேண்டிய தொகையான ரூ. 72 லட்சம் இன்று வரை வரவில்லை. இதனால் மனம் உடைந்த தத், மம்தா தன்னை திட்டமிட்டு பழி வாங்குவதாக குமுறினார். தனது மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கௌரவ் சந்திர தத்தின் தந்தையான கோபால் தத், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பாதுகாப்பு அளித்தவர்.

கௌரவ் சந்திர தத் தனது தற்கொலைக்கான வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை…

’1999-2000 இல் கேஷ்பூர் படுகொலைச் சம்பவம் மேற்கு வங்கத்தை உலுக்கியது. அப்போது, கம்யூனிஸ்ட்டுகளுக்கும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே கடும்  மோதல் வெடித்தது. இதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் நான் சூப்பரிண்டெண்டாகப் பணியாற்றினேன். கலவரத்தை தடுக்க முயன்றேன்.

ஆனால் இந்த நேரத்தில் நான் கம்யூனிஸ்ட்களுக்கு ஆதரவாக செயல்பட்டேன் என்று மம்தா கருதினார். இதற்காக என்னை பழிவாங்கினார்.

தொடர்ந்து எனக்கு காவல்துறையில் பல இடையூறுகளை உருவாக்கினார் மமதா. 33 ஆண்டுகள் நேர்மையாகப் பணியாற்றிய என்னை மம்தா பழிவாங்கிய காரணத்தால் நான் விருப்ப ஓய்வு பெற்றேன். ஆனால் அதன் பின்னும், விருப்ப ஓய்வுக்குப் பிறகான எனது பண பலன்கள்  கொடுக்காமல் மம்தா மேலும் என்னை பழிவாங்கினார்.

சிபிஐ.,க்கு எதிராக அண்மையில் தர்ணாவில் ஈடுபட்ட மம்தா, தனக்கு சாதகமாக செயல்படும் உயர் காவல் அதிகாரிகளுக்கு பரிசுப் பொருட்கள், கார், சொகுசு பங்களா, இதர சலுகைகளை வழங்கினார். தனது முறைகேடுகளுக்கு துணை போகும் நபர்களுக்கு மம்தா காட்டும் சலுகைகள் இவை… என்று குறிப்பிட்டுள்ளார் தத்.

 

News Source: https://www.opindia.com/2019/02/west-bengal-ex-ips-officer-commits-suicide-leaves-note-saying-mamata-banerjee-victimised-him-for-10-years/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.