நெல்லை-தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவை…

Tamil News large 3061625 1 - 2026

திருநெல்வேலி-தாம்பரம் இடையே மீண்டும் வாராந்திர ரெயில் சேவை
சிறிய இடைவெளிக்கு பிறகு  வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 4 ந்தேதிவரை இயக்கப்பட இருக்கிறது. பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்க நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஜூன் மாதம் நெல்லை-தாம்பரம் இடையே தென்காசி விருதுநகர் மதுரை வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூலையில் அந்த ரெயில் இயக்கப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ரெயில் வருகிற ஆக 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்பட இருக்கிறது. அதன்படி நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் (06004) வருகிற 7-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் தாம்பரம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (06003) வருகிற 8-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு நெல்லைக்கும் வந்தடைய உள்ளது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 ரெயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த ரயிலுக்கு தற்போது முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது.பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த ரயிலை தினசரி ரயிலாக இயக்கவேண்டும் என நெல்லை தென்காசி விருதுநகர் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories