
ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு செங்கோட்டை குண்டாற்று கரையில் விஸ்வகர்மா சமுதயத்தினர் பூணூல் அணிந்து வழிபாடு!
ஆடி மாதம் அமாவாசை முடிந்து ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியில், ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுவது வழக்கம். ஆவணி அவிட்டத்தில் பூணூல் அணியும் வைபவம், பூணூல் மாற்றுதல், புனித சடங்கு செய்வது வாடிக்கை அதன்படி, செங்கோட்டையில் விஸ்வகர்ம சமுதாயம் சார்பில் பூணூல் அணியும் திருவிழா குண்டாற்று கரையில் உள்ள அக்கசாலை விநாயகர் கோவிலில் நடைப்பெற்றது.

விழாவிற்கு விஸ்வகர்ம சமுதாய தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் பேச்சிமுத்து, பொருளாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் மகேஸ்வர சர்மா கலந்து கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து, காயத்ரி மந்திரங்களை கூறி, அனைவருக்கும் பூணூல் அணிவித்தார். இதில் விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த 50 க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்.
– செய்தி: S.M.S. சங்கர், செங்கோட்டை