நெல்லை மாவட்டத்தில் 14 குவாரிகளுக்கு நிரந்தர தடை

நெல்லை மாவட்டத்தில் 14 குவாரிகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை வெட்டி எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 40 கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் கடந்த மே மாதம் 14-ந்தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் பாறைகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வந்த 54 கல்குவாரிகளும் மூடப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக அதிக அளவு கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். அதன்படி 6 அதிகாரிகள் தலைமையில் தலா ஒரு குழுக்கள் அமைத்து கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி முதல் அனைத்து குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

சுமார் 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆய்வுக்கு பின் அறிக்கைகள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நெல்லை மாவட்டத்தில் செயல்பட்டு வந்ததில் 14 குவாரிகள் சட்டத்திற்கு புறம்பாக கனிம வளங்களை வெட்டி எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குவாரிகளை ஏன் மூடக்கூடாது என அதன் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. சுமார் 40 கல்குவாரிகளில் அளவுக்கு அதிகமாக எடுக்கப்பட்ட கனிம வளங்களை பொறுத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த அபராத தொகை ரூ.300 கோடியை தாண்டியது. இதையடுத்து குவாரி உரிமையாளர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், அபராதத்தை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர். மேலும் எந்த விதமான கல்குவாரிகளும் செயல்படாததினால் கற்கள், ஜல்லிகள் மற்றும் எம் சாண்ட் மணலுக்கும் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுமான தொழில்கள் முழுவதும் முடங்கிப் போய் இருப்பதாகவும் அவர்கள் அதில் கூறியிருந்தனர். இதனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கல்குவாரிகளில் குழுக்கள் ஆய்வு செய்ததில் முரண்பாடுகள் இருப்பதாக கூறி மாவட்ட நிர்வாகம் மீண்டும் முறையாக தகவல் தெரிவித்து கல்குவாரிகளை ஆய்வு செய்து விதிமீறல்கள் இருந்தால் அபராதம் விதிக்கலாம் என்று தெரிவித்தது.

மேலும் அபராதம் விதிக்கப்பட்ட 40 குவாரிகளை இடைக்காலமாக செயல்பட அனுமதிக்கலாம் எனவும், மீதமுள்ள 14 குவாரிகளில் விதிமீறல் உறுதியாகி உள்ளதால் அந்த குவாரிகளுக்கு நிரந்தரமாக தடை விதித்தும் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து சுமார் 5 மாதங்களுக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள 40 கல்குவாரிகள் செயல்பட தொடங்கின. அதற்கான அனுமதி சீட்டுகளும் நெல்லை மாவட்ட கனிமவள துறையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

1771786 quarries - 2026

.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories