Dhinasari Home page

6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம்

சற்றுமுன்

6 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு புதிய டீன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரிகளில் பணியாற்றிய 6 பேராசிரியர்களுக்கு மருத்துவ கல்லூரி முதல்வர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனராக இருந்த கே.நாராயணசாமி செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி முதல்வராகவும், தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் கரூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், சென்னை மருத்துவ கல்லூரி இயக்குனர் திருப்பதி கடலூர் மருத்துவ கல்லூரி முதல்வராகவும், ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் ராஜாஸ்ரீ திண்டுக்கல் மருத்துவ கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றனர். திருச்சி மருத்துவ கல்லூரி பேராசிரியர் சிவக்குமார், தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வராகவும், பெரம்பலூர் மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தேனி மருத்துவ கல்லூரிக்கும், தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜி தஞ்சாவூர் மருத்துவ கல்லூரிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.