குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..

images 83 - 2026

வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இதனால் சுற்றுலா பயணிகள் வருகை சற்று அதிகரித்துள்ளது.மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 87.95 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 90.58 அடியை எட்டி உள்ளது. அந்த அணைகளுக்கு வினாடிக்கு 1112 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணைகளுக்கு வினாடிக்கு 1204 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் 26 மில்லிமீட்டர் மழை பெய்தது. வடக்கு பச்சையாறு அணை பகுதியில் மழை இல்லாததால் அந்த அணைக்கு நீர் வரத்து இல்லை. மொத்தம் 50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 13.25 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதிலும் பெரும்பகுதி சகதியாகவே உள்ளது. அந்த அணையில் தற்போது 6.47 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சேரன்மகாதேவி, அம்பை, கன்னடியன், மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முக்கூடல், வீரவநல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. மாலையில் இடி, மின்னல் பயங்கரமாக இருந்ததால் முன்எச்சரிக்கையாக சிறிது நேரம் மின்வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையால் நேற்று மாலை முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. இதனால் மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

அணைகளை பொறுத்தவரை 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணையில் 81.50 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. ராமநதி அணை பகுதியில் 28 மில்லிமீட்டரும், கடனா அணை பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories